உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மண்டலாபிஷேக விழா 

மண்டலாபிஷேக விழா 

சிதம்பரம் : சிதம்பரம் அடுத்துள்ள சி.வக்காரமாரி வலம்புரி விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது.சிதம்பரம் அடுத்துள்ள சி.வக்காரமாரி கிராமத்தில் உள்ள வலம்புரி விநாயகர் மற்றும் மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. நேற்று கோவிலில், 48ம் நாள் மண்டலபிஷேக பூர்த்தி விழா நடந்தது.நிகழ்ச்சியில், நாஞ்சலுார் ஊராட்சி தலைவர் ராமகிருஷ்ணன், நகராட்சி ஒப்பந்ததாரர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மண்டலபிஷேக பூர்த்தி விழாவை கிராம தலைவர்கள் சபரி ராஜன், கலியமூர்த்தி, சுரேஷ், ஞானபாலன், நாகலிங்கம் ஆகியோர் முன்னின்று செய்திருந்தனர்.மண்டலபிஷேக பூஜைகளை சிதம்பரம் சந்திர பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி