உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாரியம்மன் கோவில் மகா கும்பாபிேஷகம்

மாரியம்மன் கோவில் மகா கும்பாபிேஷகம்

பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த புதுப்பிள்ளையார்குப்பம் கிராமத்தில் பூஞ்சோலை மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.பண்ருட்டி அடுத்த புதுபிள்ளையார்குப்பம் கிராமத்தில் பூஞ்சோலை மாரியம்மனுக்கு கோவில் மகாகும்பாபிேஷகம் நேற்று நடந்தது. விழாவையொட்டி கடந்த 21 ஆம் தேதி கணபதி ஹோமம், கும்ப பூஜை, அக்னி பிரதிஷ்டை, மகாலட்சுமி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.தொடர்ந்து முதற்காலம் முதல் 4ம் கால பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது. நேற்று காலை 9மணிக்கு காலசந்தி ஆராதனம், அக்னி ஆராதனமும், யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, புண்ணிய நதி தீர்த்தங்களை சிவாச்சாரியார்கள் சுமந்தபடி மேளதாளங்கள் முழங்க கடம்புறப்பாடாகி மாட வீதி உலா நிகழ்ச்சியும், பின் மகா கும்பாபிேஷகம் நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி