உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மார்க்கெட் கமிட்டி எம்.எல்.ஏ., ஆய்வு 

மார்க்கெட் கமிட்டி எம்.எல்.ஏ., ஆய்வு 

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த மிராளூர் மார்கெட் கமிட்டியில் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். சேத்தியாத்தோப்பு அடுத்த மிராளூர் மார்கெட் கமிட்டியில் பருத்தி கொள்முதல் பணம் பட்டுவாடா செய்வதில் தாமதம் ஏற்படுவதாக கூறி நேற்று முன்தினம் விவசாயிகள் சாலை மறியல் செய்தனர். அதனைத் தொடர்ந்து, அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., நேற்று ஆய்வு செய்து, மார்க்கெட் கமிட்டி அதிகாரிகளிடம், விவசாயிகளுக்கு பணம் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், ஒன்றிய செயலாளர்கள், சிவப்பிரகாசம், சீனிவாசன், அவைத்தலைவர் செல்வராசு, பொருளாளர் சங்கரநாராயணன், ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் அருளழகன், ஒன்றிய பேரவை செயலாளர் சாமிநாதன், பிரித்தவி, முத்து உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை