உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மா. கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா. கம்யூ., ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்: கம்மாபுரம் அடுத்த சேப்ளாநத்தம், ஊமங்கலம் கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமங்களில் நுாறுநாள் வேலை திட்டம் முறையாக வழங்க வேண்டும். கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். புதிய தார்சாலை, சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும். கருமகாரிய கொட்டகை கட்டி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் மா. கம்யூ., ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் தலைமையில், சேப்ளாநத்தம் கிராமத்தில் இருந்த துணை பி.டி.ஓ., ராமச்சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட துணை பி.டி.ஓ., உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பின் அனைவரும் கலைந்து செய்தனர்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி