சுகாதார பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
நெய்வேலி: நெய்வேலியில் என்.எல்.சி., மருத்துவமனை சார்பில் சுகாதார பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.மருத்துவமனையின் பொது கண்காணிப்பாளர் டாக்டர் சுகுமார் தலைமை தாங்கினார். என்.எல்.சி., மனிதவளத்துறை பொது மேலாளர் முருகன் முன்னிலை வகித்தார்.என்.எல்.சி., சட்டம், நிறுவன சமூக பொறுப்புணர்வு துறை செயல் இயக்குநர் மூர்த்தி முகாமை துவக்கி வைத்தார்.முகாமில், சுகாதாரப் பணியாளர்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கியதோடு, இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன. சுகாதார பணியாளர்களின் நலனுக்காக என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப் பள்ளியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முகாம் நடத்தப்பட்டது.