உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெய்வேலியில் மருத்துவ முகாம்

நெய்வேலியில் மருத்துவ முகாம்

நெய்வேலி : நெய்வேலியில் உதயநிதி பிறந்த நாளையொட்டி இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.நெய்வேலி இந்திரா நகர் மாற்று குடியிருப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த மருத்துவ முகாமில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் ராஜேஷ் முன்னிலை வகித்தனர்.அமைச்சர் கணேசன் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையின் பொதுநல மருத்துவர்கள் தலைமையிலான மருத்துவ குழுவினர் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.நிகழ்ச்சியில் கடலுார் மேற்கு மாவட்ட மருத்துவரஅணி தலைவர் வேல்முருகன், நெய்வேலி தொகுதி மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் சிவசுப்பிரமணிய பாரதி, புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை டாக்டர் தனலட்சுமி, தி.மு.க.,வின் நெய்வேலி நகர செயலாளர் குருநாதன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய அவைத் தலைவர் வீர ராமச்சந்திரன், பொருளாளர் ஆனந்த ஜோதி, மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், பண்ருட்டி ஒன்றிய துணை செயலாளர் சுமதி நந்தகோபால், நெய்வேலி நகர இளைஞரணி ஸ்டாலின், மாவட்ட மருத்துவர் அணி நிர்வாகிகள் சேதுபதி, செல்லையா, மாதவன், விருத்தகிரி, செந்தில்குமார், பாலச்சந்தர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி