உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பு.முட்லுாரில் இன்று மருத்துவ முகாம்

பு.முட்லுாரில் இன்று மருத்துவ முகாம்

பரங்கிப்பேட்டை: பு.முட்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், இன்று 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. பொது சுகாதார துறை சார்பில், பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (30ம் தேதி) காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. அமைச்சர் பன்னீர்செல்வம், முகாமை துவக்கி வைக்கிறார். முகாமில், இருதயம், நரம்பியல், நுரையீரல் சிகிச்சை, மகப்பேறு நலம் மற்றும் மகளிர் நலம், ஸ்கேன், எக்கோ, இ.சி.ஜி., உட்பட 17 வகை சிறப்பு மருத்துவ நிபுணர்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. முகாமிற்கு, வரும் நோயாளிகள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ