மேலும் செய்திகள்
ரோட்டரி சங்கம் சார்பில் ரத்த தான முகாம்
17-Sep-2025
கடலுார்; கடலுார் சுரேந்திரா மருத்துவமனையில் அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில் பொது மருத்துவ முகாம் நடந்தது. ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்காக நடந்த இம்முகாமில் மாவட்ட ஆலோசகர் ஜனார்த்த னம் தலைமை தாங்கினார். மாவட்ட ஆளுநர் லியோன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் கவின்கேர் குரூப் சேர்மன் ரங்கநாதன், முகாமை துவக்கி வைத்தார். முன்னாள் மாவட்ட ஆளுநர் பிறையோன், சுரேந்திரா மருத்துவமனை சேர்மன் டாக்டர் ராஜேந்திரன் வாழ்த்திப் பேசினர். ஏற்பாடுகளை உதவி ஆளுநர் ஜெயசங்கர், முன்னாள் உதவி ஆளுநர் அப்பர்சாமி, மண்டல செயலாளர் செந்தில்பாரதி, சங்கத் தலைவர்கள் ரோட்டரி கிளப் சிவராஜ், சென்ட்ரல் ரோட்டரி சீனிவாசன், மிட்டவுன் ரோட்டரி வெங்கடேஷ், சங்கமம் ரோட்டரி மோகன், கூத்தப்பாக்கம் ரோட்டரி சங்கர், கோஸ்டல் சிட்டி ரோட்டரி ரவி செய்திருந்தனர்.
17-Sep-2025