மருத்துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாம்
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடந்தது.காப்பீடு திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன், முன்னாள் நகர தி.மு.க., செயலாளர் முனவர் உசேன் முன்னிலை வகித்தனர். துணை சேர்மன் முகம்மது யூனுஸ் துவக்கி வைத்தார்.முகாமில், கவுன்சிலர்கள் ஜாபர் ஷரீப், ரொகையாமா குன் முஹம்மது, ராஜேஸ்வரி வேல்முருகன், ஜாஸ்மின் நிஹார் அஜீஸ், வர்த்தக சங்க செய்தி தொடர்பாளர் ரமேஷ், சமூக ஆர்வலர் முத்துராஜா மற்றும் ஜமா அத் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பதிவு செய்து கொண்டனர்.