உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டல் பயிற்சி

பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டல் பயிற்சி

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு, நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வி வழிகாட்டல் பயிற்சி அளிக்கப்பட்டது.பல்கலைகழக நுாலக கட்டடத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கீரப்பாளையம், புவனகிரி, குமராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதி அரசு பள்ளிகளில் இருந்து பிளஸ் 2 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு, எதிர்காலத்தில் என்ன படிக்கலாம், எதிர்கால கல்விக்கான சந்தேகங்கள், கல்விச்சலுகைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.பேராசிரியர் விஜயராணி தலைமையில் விரிவுரையாளர்கள் மாணிக்கவாசகம், சக்திவேல் ஆகியோர் பயிற்சி அளித்தனர். கீரப்பாளையம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் குணசேகரன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர் ராஜசேகர், சக்திவேல் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை