உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எம்.ஜி.ஆர்., நினைவு நாள் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

எம்.ஜி.ஆர்., நினைவு நாள் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

திட்டக்குடி : முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு நாளன்று அவரது உருவ சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என, அ.தி.மு.க., கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., கேட்டுக்கொண்டுள்ளார்.அவரது அறிக்கை:அ.தி.மு.க., பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனைப்படி, எம்.ஜி.ஆர்., 37வது நினைவு நாளான, வரும் 24ம் தேதி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, வட்ட அளவில் கொண்டாட வேண்டும். நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் எம்.ஜி.ஆர்., சிலைகளுக்கு மாலை அணிவித்தும், எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும்.மாநில, மாவட்ட, சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட, கிளை, வார்டு நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்'.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை