உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலம்

பெண்ணாடம்:பெண்ணாடம், திருமலை அகரம் சாலையில் உள்ள பெரியாண்டவர் கோவிலில் ஆடிமாத பால்குட ஊர்வலம் நடந்தது. இதையொட்டி, காலை 8:00 மணியளவில் பெரியாண்டவர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை 10 மணியளவில் முக்குளத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்து, முக்கிய வீதிகளின் வழியாக சென்று, பெரியாண்டவருக்கு பாலபிேஷகம் செய்து வழிபட்டனர். பகல் 11 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தொடர்ந்து, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை