உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மனவளக் கலை யோகா கோடை கால பயிற்சி முகாம்

 மனவளக் கலை யோகா கோடை கால பயிற்சி முகாம்

கடலுார்: உலக சமுதாய சேவா சங்கம் திருப்பாப்புலியூர் அறக்கட்டளை சார்பில் மனவளக்கலை யோகா கோடை கால பயிற்சி முகாம் நடந்தது. பேராசிரியர் சீனிவாசன் வரவேற்றார். விஜயகுமார சுவாமிகள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். மஞ்சு கலைக்கூடம் நிறுவனர் முத்துக்குமரன் அறிமுக உரையாற்றினார். முகாமில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த பேராசிரியர்கள் சுப்பிரமணி, ராஜாராம், ஜெயமணி, சசிரேகா, கஸ்துாரி, மனோகர், மீனாட்சி, சுசித்ரா, செந்தமிழ்ச்செல்வி, பாரதி, ஜெயராம் ராஜா ஆகிய மனவளக்கலை மன்ற பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். உலக பூமி தினத்தையொட்டி முனைவர் சிவக்குமார் சுற்றுச்சூழல் தொடர்பாக மாணவர்களிடம் விளக்கவுரை ஆற்றினார். பேராசிரியர் கீதா சீனிவாசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி