உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 50 அடி பள்ளத்தில் பாய்ந்த மினி டெம்போ; சேத்தியாத்தோப்பில் டிரைவர் தப்பினார்

50 அடி பள்ளத்தில் பாய்ந்த மினி டெம்போ; சேத்தியாத்தோப்பில் டிரைவர் தப்பினார்

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அருகே 50 அடி பள்ளத்தில் மினி டெம்போ கவிழ்ந்ததில், டிரைவர் உயிர் தப்பினார்.தஞ்சாவூரை சேர்ந்த கருப்பையன் மகன் கவுதமன், 32; நேற்று முன்தினம் இரவு தனது மினி டெம்போ வாகனத்தில் வடலுாரில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு, தஞ்சாவூருக்கு நள்ளிரவு 1:00 மணியளவில் புறப்பட்டு சென்றார்.சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடி வளைவு பாலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த டெம்போ, 50 அடி பள்ளத்தில் வீராணம் ஏரி வாய்க்காலில் பாய்ந்தது. வய்க்காலில் தண்ணீர் இருந்ததால் டெம்போ டிரைவர் கவுதமன், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவலறிந்த சேத்தியாத்தோப்பு போலீசார் சென்று வாய்க்காலில் விழுந்த மினி டெம்போவை மீட்டனர்.குமாரகுடி வளைவு பாலம் ஏற்கனவே உடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதுடன், அடிக்கடி வாகன விபத்துக்கள் நடந்து வருகிறது. உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ