உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மினி டெம்போ மோதி மின் கம்பம் சாய்ந்தது

மினி டெம்போ மோதி மின் கம்பம் சாய்ந்தது

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் இருந்து காட்டுமன்னார்கோவில் பகுதிக்கு நேற்று லோடு ஏற்றிக் கொண்டு மினி டெம்போ சென்று கொண்டிருந்தது. பூதங்குடி அருகே மினி டெம்போ வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர உயர்மின் அழுத்த கம்பத்தில் மோதியதால் பரபரப்பு நிலவியது. இதில் மின் கம்பம் சாய்ந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சேத்தியாத்தோப்பு துணைமின் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், மின் இணைப்பை துண்டித்து மின்கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஒரத்துார் போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !