மேலும் செய்திகள்
தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
18-May-2025
சிறுபாக்கம் : திட்டக்குடி சட்டசபை தொகுதி செயல்வீரர்கள் கூட்டம், மங்களூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.மங்களூர் தெற்கு ஒன்றிய தி.மு.க.,செயலாளர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன், திட்டக்குடி தொகுதி பொறுப்பாளர் சுபா சந்திரசேகர் முன்னிலை வகித்தனர்.அமைச்சர் கணேசன் பேசுகையில், 'தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்த நான்கு ஆண்டுகளாக அனைத்துக் கிராமங்களிலும் 2 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை, ஒவ்வொரு ஊராட்சியிலும் குடிநீர், சாலை வசதி, அங்கன்வாடி கட்ட டம், சாலை மேம்பாடு, சுகாதாரம், தனிநபர் கான்கிரீட் வீடுகள் உட்பட பல்வேறு பணிகள் நடக்கிறது.திட்டக்குடி தொகுதியை பொறுத்தவரை எந்த ஆட்சியிலும் இவ்வளவு பணிகள் நடந்தது இல்லை. குறைகள் இருந்தால் தனிப்பட்ட முறையில் கூறுங்கள், திருத்திக்கொள்கிறேன்; மாற்றிக்கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலின் தந்த திட்டங்களால் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது.வரும் சட்டசபை தேர்தலிலும் அதிக ஓட்டுகள் பெற்று மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய பாடுபட வேண்டும்' என்றார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சின்னசாமி, அமிர்தலிங்கம், நகர செயலாளர்கள் பரமகுரு, குமரவேல் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
18-May-2025