மேலும் செய்திகள்
மகளிர் குழுவினருக்கு ரூ.40 கோடியில் கடன் உதவி
17-Sep-2025
கடலுார்:கடலுாரில் சுய உதவிக் குழுவினர்களுக்கு வங்கிக்கடன் மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா நேற்று சுப்புராயலு ரெட்டியார் மண்டபத்தில் நடந்தது. விழாவில் எம்.எல்.ஏ., க்கள் சிந்தனைச்செல்வன், ராதாக்கிருஷ்ணன், துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கணேசன் சுய உதவிக்குழுவினருக்கு வங்கிக்கடன், அடையாள அட்டை வழங்கி பேசியதாவது: மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 14,880 மகளிர் சுய உதவி குழுக்களும், நகர் புறங்களில் 4,419 குழுக்கள் என மொத்தம் 19,299 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அரசின் மூலம் வங்கி கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கிராம பகுதிகளை அதிகமாக கொண்ட மாவட்டம் என்பதோடு பெருவாரியான பெருமக்கள் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அடையாள அட்டை பெற்றவர்கள் பஸ்களில் கட்டணமின்றி 25 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்லவும், கோ-ஆப்டெக்ஸ் மற்றும் ஆவின் நிறுவனங்களில் 5 சதவீத சிறப்பு தள்ளுபடியும் இ-சேவை மையங்களில் சேவை கட்டணத்தில் 10 சதவீத தள்ளுபடியும் பெறலாம். இதர பயிர்க் கடன் கால்நடைக் கடன், சிறுவணிகக் கடன், தொழில்முனைவோர் கடன், மாற்றுத் திறனாளிகள் கடன்களில் முன்னுரிமை வழங்கப்படும். தற்போது மாவட்டதில் 1148 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 113.24 கோடி ரூபாய் கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. மகளிர் உதவிக் குழுவினர்கள் வங்கியின் மூலம் பெறப்படும் கடன் உதவிகளை முறையாக தொழிலுக்கான முதலீடாக பயன்படுத்தி நிலையான வருவாயினை ஈட்டும் தொழில் முனைவோர்களாக தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் ஜெயசங்கர், கடலுார் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சுபாஷினி, உதவி திட்ட அலுவலர்கள் ராஜேஷ்குமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
17-Sep-2025