உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ. 4 கோடி நலத்திட்ட உதவி அமைச்சர் கணேசன் வழங்கல்

ரூ. 4 கோடி நலத்திட்ட உதவி அமைச்சர் கணேசன் வழங்கல்

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., ராஜசேகரன், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ., அபிநயா, கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் இளஞ்செல்வி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் அமைச்சர் கணேசன் முகாமை துவக்கி வைத்தார். பின், 94 பேருக்கு பட்டா மாற்றம் செய்து உத்தரவு நகல் வழங்கினார். சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 6 பேருக்கு இறப்பு நிவாரணமாக ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய்க்கான காசோலை, தொழிலாளர் நலத்துறை சார்பில் 24 பேருக்கு 10 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, மகளிர் திட்டத்தின் கீழ் 3 குழுவினருக்கு 15 லட்சம் ரூபாய் என மொத்தம் 300 பேருக்கு 4 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். விழாவில், தாசில்தார் பிரகாஷ், பி.டி.ஓ.,மீராகோமதி, பாபு, முன்னாள் ஒன்றிய சேர்மன் பாலமுருகன், ஊராட்சி செயலர் நடராஜன், முருகன், கலைச்செல்வன், கிளை செயலாளர்கள் சுரேஷ், மணிகண்டன் மணிவாசகன், கண்ணுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை