வளர்ச்சி பணிகளை அமைச்சர் ஆய்வு
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து, பல்வேறு துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடந்தது.குறிஞ்சிப்பாடி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாத்தில் நடந்த கூட்டத்தில், அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, குறிஞ்சிப்பாடி பேரூராட்சி, வடலுார் ஊராட்சி, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு, தொகுதியில் நடை பெறும் பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.டி.ஆர்.ஓ., இராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் சரண்யா உட்பட பலர் பங்கேற்றனர்.