உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலம் பகுதியில் அமைச்சர் ஆய்வு 

விருத்தாசலம் பகுதியில் அமைச்சர் ஆய்வு 

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார்.விருத்தாசலம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் விருத்தாசலம் வயலுார் ரயில்வே சுரங்கப் பாதை யில் தண்ணீர் தேங் கியது. மேலும், செம்பளக்குறிச்சி ரயில்வே சுரங்கப்பாதை, பூதாமூர், தில்லை நகர் ஆகிய தண்ணீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் கணேசன் பார்வையிட்டார். தொடர்ந்து, தண்ணீரை விரைந்து வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.நகர மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத், ஒன்றிய சேர்மன் மலர் முருகன், தாசில்தார் உதயகுமார் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள், வருவாய்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி