உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதல்வர் வருகை முன்னேற்பாடு அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு

முதல்வர் வருகை முன்னேற்பாடு அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு

சிதம்பரம்: தமிழக முதல்வர் ஸ்டாலின் கடலுார் மாவட்டத்திற்கு வருகை முன்னேற்பாடு பணிகள் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். கடலுார் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, முன்னாள் எம்.பி., இளையபெருமாள் நுாற்றாண்டு அரங்கம், பரமேஸ்வரிநல்லுாரியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் துவக்க விழா நடக்கும் இடத்தில் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். பின், அவர் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் வரும் 14 ம் தேதி இரவு ரயில் மூலம் சிதம்பரம் வருகிறார். 15 ம் தேதி காலை சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கிறார். சிதம்பம் தனியார் மண்டபத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டத்தை துவக்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் கடலுார் மாவட்டத்தில், நகர் பகுதிகளில் 130 முகாம், ஊரகப் பகுதிகளில் 248 முகாம் நடக்கிறது. முகாம் நடக்கும் பகுதிகளில் 2 நாட்களுக்கு முன்பாக தன்னார்வலர்கள் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று முகாம் குறித்த விவரங்களை தெரியப்படுத்தி, விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. 6.39 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட முன்னாள் எம்.பி., இளையபெருமாள் நுாற்றாண்டு அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தாசில்தார் கீதா, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி, நிர்வாகிகள் கார்த்திகேயன், அப்புசந்திரசேகர், வெங்கடேசன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை