மேலும் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்..
15-Aug-2025
சிதம்பரம் : சிதம்பரத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். சிதம்பரம் நகராட்சியில், 3, 4, 5 6வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. பைசல் மகாலில் நடந்த, முகாமை சிதம்பரம் நகரமன்ற தலைவர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் முகாமை பார்வையிட்டு, மனுக்கள் குறித்த விபரங்களை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து நலவாழ்வுத் துறை ஸ்டாலை பார்வையிட்ட அமைச்சர் பிளட் பிரஷர் பரிசோதனை செய்து கொண்டார். முகாமில், கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார், நகராட்சி கமிஷனர் மல்லிகா, சப் கலெக்டர் கிஷன் குமார், தாசில்தார் கீதா, நகராட்சி பொறியாளர் சுரேஷ், கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகரன், வெங்கடேசன், சரவணன், தஸ்லிமா மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், கிருஷ்ணமூர்த்தி, இளங்கோவன், மக்கள் அருள், ஸ்ரீதர் உட்பட துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
15-Aug-2025