உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜி.கே.,பள்ளியில் 33ம் ஆண்டு விழா மாணவர்களுக்கு அமைச்சர் பரிசளிப்பு

ஜி.கே.,பள்ளியில் 33ம் ஆண்டு விழா மாணவர்களுக்கு அமைச்சர் பரிசளிப்பு

காட்டுமன்னார்கோவில், ; ஜி.கே., கல்விக்குழும மெட்ரிக் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த 33ம் ஆண்டு விழாவில், அமைச்சர் பன்னீர்செல்வம் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். காட்டுமன்னார்கோவில் ஜி.கே., கல்விக்குழும பள்ளிகளின் 33 ம் ஆண்டு விழாவிற்கு கல்விக்குழும நிறுவனர் குமாரராஜா தலைமை தாங்கினார். குழந்தை நல மருத்துவர் வீரநாராயணன், கே.எஸ்.கே., கன்ஸ்ட்ரக்ஷன் வேல்முருகன், செயலாளர் அருண், இயக்குனர் டாக்டர் அகிலன் முன்னிலை வகித்தனர். தாளாளர் தமிழ்செல்வி குமாரராஜா குத்துவிளக்கேற்றினார். அமைச்சர் பன்னீர்செல்வம், அரசு பொது தேர்வில், மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளியில் அதிக மதிப்பெண் மாணவர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கடந்த ஆண்டு பள்ளியில் படித்து, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மேற்படிப்புகளில் பயிலும் 64 மாணவர்களுக்கு பாராட்டி பரிசு வழங்கினார். முன்னதாக பள்ளியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட, கூடைப்பந்து ஆடுகளம், கிரிக்கெட் வளை பயிற்சி மைதானம் ஆகியவற்றை அமைச்சர் திறந்து வைத்தார். புரவலர் முத்துசாமி, ஆசிரியர்கள் பழனிசாமி, சின்னமணி, பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி, ஜி.கே., கல்விக்குழும இயக்குனர்கள் அனிதா மோகன்குமார், டாக்டர் ஐஸ்வர்யா அருண், டாக்டர் ரம்யா அகிலன், தன்னம்பிக்கை பயிற்சியாளர் ஜெகன், முன்னாள் எம்.எல்.ஏ., நாசர், கல்விக்குழும முதல்வர்கள் பார்த்திபன், தேவதாஸ், பாலதண்டாயுதபாணி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !