மேலும் செய்திகள்
கலாமுக்கு பசுமை அஞ்சலி
28-Jul-2025
புவனகிரி : வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பிறந்த நாளையொட்டி புவனகிரி அடுத்த அழிச்சிகுடியில் மரக்கன்று நடும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஆத்மா திட்ட இயக்குனர் சாரங்கபாணி தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் இளையராஜா வரவேற்றார். கிளைச் செயலாளர் பாஸ்கர், பாலமுருகன், சிவச்சிதம்பரம், மனோபாலா, மணிவண்ணன் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி தலைவர் அமிர்தவல்லி கலியமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு மரக்கன்றுகளுடன், இனிப்பு மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் கார்த்திகேயன், இளைஞரணி மணிவேல், கிளை பொருளாளர் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
28-Jul-2025