உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம் அமைச்சர்கள் துவக்கி வைப்பு

புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம் அமைச்சர்கள் துவக்கி வைப்பு

சிறுபாக்கம்: சிறுபாக்கத்தில் புதிய வழித்தடத்தில் அரசு பஸ்சை அமைச்சர்கள் கணேசன் மற்றும் சிவசங்கர் துவக்கி வைத்தனர். சிறுபாக்கத்திலிருந்து திட்டக்குடி வழியாக தஞ்சாவூர் வரை, புதிய வழித்தடத்தில் இயங்கும் அரசு பஸ் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி சிறுபாக்கம் பஸ் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, போக்குவரத்துத்துறை நிர்வாக இயக்குனர் குணசேகரன் தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை பொது மேலாளர் பாண்டியன், கிளை மேலாளர் பிரேமா முன்னிலை வகித்தனர். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் பங்கேற்று, கொடி அசைத்து அரசு பஸ்சை துவக்கி வைத்தனர். இதில், மங்களூர் தி. மு.க., ஒன்றிய செயலர்கள் சின்னசாமி, செங்குட்டுவன், அமிர்தலிங்கம், திட்டக்குடி நகர செயலர் பரமகுரு, முன்னாள் சேர்மன் சுகுணா சங்கர், தி.மு.க., அயலக அணி நிர்வாகி சேதுராமன், தி.மு.க., நிர்வாகிகள் வெங்கடேசன், நிர்மல், ராமதாஸ், மருதமுத்து, பாப்பாத்தி ராமலிங்கம், மனோகரன், செல்வராசு, தொ.மு.ச., நிர்வாகிகள் பெருமாள், பிரேம்குமார் உட்பட பலர் பங்கேற் றனர். கூட்டத்தில் அமைச்சர் கணேசன் பேசியதாவது., தஞ்சாவூரிலிருந்து திட்டக்குடி வரை இயங்கிய அரசு பஸ்சை, சிறுபாக்கம் வரை நீட்டித்து புதிய வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. மேலும், பெரம்பலூரிலிருந்து சிறுபாக்கம் வரை புதிய அரசு பஸ்சை இயக்க வேண்டுமென அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். விரைவில் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி