மேலும் செய்திகள்
குட்டையில் தொழிலாளி சடலம் போலீஸ் விசாரணை
05-Oct-2026
கடலுார்: குட்டையில் தொழிலாளி இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். புதுச்சேரி, பாகூரைச் சேர்ந்தவர் பிரபு,38; கூலித் தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர், கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று (அக்.,21) கடலுார் அடுத்த தென்னம்பாக்கம் அழகர் கோவில் அருகில் உள்ள மீன் குட்டையில் அவர், சடலமாக மிதந்தார். புகாரின் பேரில், துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து, பிரபு ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரிக்கின்றனர்.
05-Oct-2026