உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை சட்டசபையில் எம்.எல்.ஏ., கோரிக்கை

கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை சட்டசபையில் எம்.எல்.ஏ., கோரிக்கை

கடலுார் : கடலுார் தேவனாம்பட்டினம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அய்யப்பன் எம்.எல்.ஏ., சட்டசபையில் பேசினார்.இதுகுறித்து அவர் சட்டசபையில் பேசியதாவது:இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போதெல்லாம் கடலுார் நகரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது. கடற்கரையோரம் 300மீ., இருந்த மணற்பரப்பு, கடல் அரிப்பால் தற்போது 100மீ., அளவிற்கு சுருங்கி விட்டது. கடந்த தி.மு.க.,ஆட்சியின் போது எனது கோரிக்கையை ஏற்று தாழங்குடாவிலிருந்து தேவனாம்பட்டினம் வரை 3 கோடி ரூபாய் மதிப்பில் கற்களை கொட்டி மக்கள் காக்கப்பட்டனர்.தற்போது தேவனாம்பட்டினம், சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு வரை மீண்டும் கடல் அரிப்பு ஏற்பட்டு, வீடுகளில் கடல் நீர் உட்புகும் அளவிற்கு தண்ணீர் வரத்து உள்ளது. இங்கு, கற்களைக் கொட்டி, கடல் நீர் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலுாரில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், பெண்ணையாற்றின் கரைகளை ஒழுங்குபடுத்தி சீரமைப்பதற்காகவும், கான்கிரீட் அமைப்பதற்காகவும் 57கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, கரைகளை பலப்படுத்த அறிவிப்பு வெளியிட்டார். இதற்காக தொகுதி மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இதேப் போன்று, மலட்டாற்றின் கரைகளை சீர் செய்து, பெண்ணையாற்றில் வெள்ளப்பாக்கம், அழகியநத்தம் பகுதியில் தடுப்பணை அமைத்து மக்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை