பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்.எல்.ஏ., உணவு வழங்கல்
கடலுார்: கடலுாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., உணவு வழங்கினார்.தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடலுார் குண்டுசாலை, வெளிச்செம்மண்டலம்மற்றும் ஊராட்சி பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நேற்று காலை கடலுார் அடுத்த பெரிய கங்கணாங்குப்பம், வெளிச்செம்மண்டலம், குறிஞ்சிநகர், நடேசன் நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளை அய்யப்பன் எம்.எல்.ஏ., நேரில் பார்வையிட்டார். குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரட், பிஸ்கட் மற்றும் உணவு வழங்கினார். டாக்டர் பிரவீன் அய்யப்பன், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், முன்னாள் ஊராட்சிதலைவர் சுதாகர், நிர்வாகிகள் பரத், அண்ணாதுரை, வார்டு உறுப்பினர் பிரபாவதி உட்பட பலர் உடனிருந்தனர்.