உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுடுகாட்டு பாதை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

சுடுகாட்டு பாதை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

கடலுார்: பாதிரிக்குப்பம் சுடுகாட்டுப் பாதை அமைக்கும் பணியை அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாதிரிக்குப்பம் ஊராட்சியில் சுடுகாடு செல்லும் சாலை சேதமடைந்திருந்தது. அதையடுத்து, புதிய சாலை அமைக்க 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து, பணி துவங்கியது.அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி சாலை பணியை துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இப்ராஹிம், பார்த்திபன், ஊராட்சி தலைவர் சரவணன், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், முத்துக்குமரன், கணேசன், ஜெயராமன், ஆனந்த் பன்னீர், கூட்டுறவு நகர் நல சங்க தலைவர் தேவநேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை