உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலை பணிக்கு எம்.எல்.ஏ., அடிக்கல்

சாலை பணிக்கு எம்.எல்.ஏ., அடிக்கல்

பண்ருட்டி: ஏரிபாளையம் ஊராட்சியில் சிமென்ட் சாலை பணிக்கு சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டினார். பண்ருட்டி அடுத்த ஏரிபாளையம் ஊராட்சியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 12.50 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜையை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். விழாவில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மீரா கோமதி, பாபு, தலைமை ஆசிரியர் சிவகாமி, ஒப்பந்ததாரர் செந்தில்நாதன், வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் சந்தோஷ் குமார், ஜெகஜீவன் ராம், பூபாலன், செழியன், உள்ளிட்டேர் கலந்து கொண்டனர். இதேப் போன்று, திருவாமூர் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் 1.14 கோடி ரூபாய் மதிபபில் 5 வகுப்பறை கொண்ட பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை