புதிய ரேஷன் கடை எம்.எல்.ஏ., திறப்பு
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த சொட்டவனம் கிராமத்தில், எம்.எல்.ஏ., நிதி ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப் பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் மருதை முனுசாமி தலைமை தாங்கினார். மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் அருளழகன், ஒன்றிய பொருளா ளர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., ரேஷன் கடையை திறந்த வைத்தார். மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் மணிமாறன், செல்வம், ஒன்றிய துணை செயலாளர் சேகர், மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் கனகராஜன், முன்னாள் ஊராட்சி செயலாளர் தனபாண்டியன், ஒன்றிய அவை தலைவர் செல்வராசு உட்பட பலர் பங்கேற்றனர்.