உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காத்திருப்போர் கூடம் எம்.எல்.ஏ., திறப்பு

காத்திருப்போர் கூடம் எம்.எல்.ஏ., திறப்பு

மந்தாரக்குப்பம் : மேல்பாதி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட காத்திருப்போர் கூடம் திறப்பு விழா நடந்தது. கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம், மேல்பாதி ஊராட்சியில் புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியின் கீழ் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் காத்திருப்போர் கூடம் அமைக்கப்பட்டது. இதனை அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நேற்று திறந்து வைத்து பேசினார். மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் அருளழகன், ஒன்றிய செயலாளர் சின்னரகுராமன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன், ஜெ., பேரவை செயலாளர் ராஜ்குமார், நிர்வாகிகள் ராஜபாண்டியன், ஆறுமுகம், சிவகண்டன், சரவணன், பார்த்தசாரதி, சதீஷ்குமார், கோகுலகிருஷ்ணன், ராஜரத்தினம் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை