மாவட்ட அளவில் சிறப்பிடம் மாணவருக்கு எம்.எல்.ஏ., பாராட்டு
விருத்தாசலம் : கடலுார் மாவட்ட அளவில் 10ம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவரை, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., சால்வை அணிவித்து பாராட்டினார்.கம்மாபுரம் அடுத்த கோ.மாவிடந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மகாராஜன் - ரேவதி. விவசாய தம்பதியின் இரண்டாவது மகன் கணேஷ்,15; கோ.ஆதனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகளில் தமிழில் 99, ஆங்கிலம் 97, கணிதம் 99, அறிவியல் 100, சமூக அறிவியலில் 99 என 494 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தார்.சாதனை படைத்த மாணவரின் வீட்டிற்கு அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., சென்று சால்வை அணிவித்து பாராட்டி, ஊக்கத்தொகை வழங்கினார். இவரது சகோதரர் தினேஷ், பிளஸ் 2 தேர்வில், 553 மதிப்பெண்கள் பெற்று, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலிடம் பிடித்தார். அ.தி.மு.க., பேரவை மாநில துணை செயலாளர் அருளழகன், ஒன்றிய செயலாளர் முனுசாமி, துணை செயலாளர் சேகர், பொருளாளர் சுரேஷ், பேரவை இணை செயலாளர்கள் மணிமாறன், குறிஞ்சிசெல்வன், ஒன்றிய செயலாளர் வேலாயுதம், மகளிரணி செயலாளர் வெங்கடேஸ்வரி, கிளை செயலாளர்கள் ஜம்புலிங்கம், பாண்டியன் உடனிருந்தனர்.