உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குப்பை சேகரிப்பு வாகனம் எம்.எல்.ஏ., வழங்கல்

குப்பை சேகரிப்பு வாகனம் எம்.எல்.ஏ., வழங்கல்

நெய்வேலி : நெய்வேலியில் துாய்மை பணியாளர்களின் பயன்பாட்டிற்கு குப்பை சேகரிக்கும் வாகனங்களை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வழங்கினார். நெய்வேலியில் குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியத்தில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் பயன்பாட்டிற்கு மூன்று சக்கர குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வழங்கும் விழா நடந்தது. பி.டி.ஓ., ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். வடக்குத்து ஊாரட்சி செயலர் சிவக்குமார் வரவேற்றார். வடக்குத்து ஊராட்சிக்கு 13 குப்பை சேகரிக்கும் மூன்று சக்கர பேட்டரி வாகனங்களும், சமட்டிக்குப்பம் மற்றும் கோரணப்பட்டு ஊராட்சிக்கு தலா ஒரு வாகனத்தையும் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வழங்கினார். விழாவில், மேற்கு ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், சந்தோஷ்குமார், அவைத் தலைவர் வீர ராமச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் ஜோதி, ஊராட்சி ஒன்றிய பொறியாளர் அனுசுயா தேவி, வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் கல்யாண சுந்தரம், வடக்குத்து கிளை செயலாளர் சுரேஷ், ஊராட்சி செயலாளர்கள் சீத்தாராமன், அறிவழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ