பரதநாட்டிய மாணவிகளுக்கு எம்.எல்.ஏ., கேடயம் வழங்கல்
கடலுார்; கடலுாரில் பரதநாட்டிய மாணவிகளுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., கேடயம் வழங்கினார். கடலுாரில் சிவதாண்டவ நாட்டியாலயா பள்ளி சார்பில் நடந்த பரதநாட்டிய அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மாணவிகளுக்கு கேடயங்கள் வழங்கினார்.லீமா அய்யப்பன், டாக்டர் பிரவீன் அய்யப்பன் குத்துவிளக்கேற்றினர். பள்ளி இயக்குனர் ஞானசேகரன் வரவேற்றார்.விழாவில், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், அருணாச்சலா பி.வி.சி., பைப்ஸ் நாராயணசாமி, கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், சன் பிரைட் பிரகாஷ், கார்த்திக், அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சிறப்பு தலைவர் மருதவாணன் உட்பட பலர் பங்கேற்றனர்.