உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஸ்சில் தவற விட்ட பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

பஸ்சில் தவற விட்ட பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

நெல்லிக்குப்பம் : அரசு பஸ்சில் பயணி தவறவிட்ட பணப்பையை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த கண்டக்டருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கடலுாரில் இருந்து நேற்று மாலை அரசு பஸ் சிறுவந்தாடு நோக்கி சென்று கொண்டிருந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு அருகே சென்ற போது பயணிகள் இருக்கையின் கீழே பை ஒன்று கிடப்பதை கண்டக்டர் சூர்யா எடுத்து பார்த்தார். அதில் 2,800 ரூபாய் பணம், மளிகை பொருட்கள், மொபைல் போன் இருந்தது தெரிந்தது. சிறுவந்தாடு சென்று திரும்பி கடலுார் வரும் போது நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனிடம் பையை சூர்யா ஒப்படைத்தார். இவரது நேர்மையை போலீசார் பாராட்டினர். விசாரனையில் நெல்லிக்குப்பம் ஏ.வி.ஜி.தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற வருவாய் துறை ஊழியர் நாராயணன்,80; பஸ் சில் வரும்போது பையை தவறவிட்டது தெரிந்தது. இதையடுத்து நாராயணனிடம் பை ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ