உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குழந்தைகளுடன் தாய் மாயம்

குழந்தைகளுடன் தாய் மாயம்

கடலுார்: கடலுார் அருகே இரண்டு குழந்தைகளுடன் தாய் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலுார் முதுநகர் அடுத்த குழந்தை காலனியைச் சேர்ந்தவர் தியாகு மனைவி ஹேமாமாலினி,30; இவர்களுக்கு 10 வயதில் மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 1ம் தேதி காலை வீட்டிலிருந்த மூவரும் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ