உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சேத்தியாதோப்பு அருகே வி.கே.டி., சாலையில் விரிசல் மண் சரிவு ஏற்படும் அபாயத்தால் வாகன ஒட்டிகள் அச்சம்

சேத்தியாதோப்பு அருகே வி.கே.டி., சாலையில் விரிசல் மண் சரிவு ஏற்படும் அபாயத்தால் வாகன ஒட்டிகள் அச்சம்

சேத்தியாத்தோப்பு அடுத்த பெரியகுப்பம் வெள்ளாறு பாலம் அருகே வி.கே.டி, சாலை பிளவு ஏற்பட்டு மண் சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விக்கிரவாண்டி-தஞ்சாவூர் புதிய பைபாஸ் சாலை பின்னலுாரில் துவங்கி சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு, பால் பண்ணை, ஆணைவாரி, மேட்டுத்தெரு, சின்னகுப்பம், பெரியகுப்பம், வெள்ளாறு, மழவராயநல்லுார், குமாரக்குடி வரை வயல்வெளியில் அமைக்கப்பட்டுள்ளது. பெரியகுப்பம் அருகே உயர்மட்ட பாலத்திற்கும், வெள்ளாறு புதிய பாலத்திற்கும் இடையில் சாலையில் விரிசல்களும், ஆங்காங்கே பிளவு ஏற்பட்டுள்ளது.30 அடி உயரத்தில் போடப்பட்டுள்ள சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளதால் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இங்கு சாலைப் பணி முடிப்பதற்குள் கனரக வாகனங்களும் மண், ஜல்லி ஏற்றிச்செல்லும் டிப்பர் லாரிகள் அதிகளவில் சென்று வருகின்றனர்.மேலும் மண்கொட்டி உயர்த்தி போடப்பட்டுள்ள தார்சாலையில் ஒரங்களில் கான்கீரிட் சுவர் அமைக்காததால் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் இப்போதே பிளவு ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.எனவே நகாய் அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து சாலை பிளவு ஏற்பட்டுள்ள பகுதியை சரி செய்து மீண்டும் பிளவு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை