உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசின் திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும் எம்.பி.,க்கள் விஷ்ணுபிரசாத், திருமாவளவன் வலியுறுத்தல்

அரசின் திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும் எம்.பி.,க்கள் விஷ்ணுபிரசாத், திருமாவளவன் வலியுறுத்தல்

கடலுார்:மத்திய, மாநில அரசின் திட்டங்கள் எதுவாக இருந்தாலும், குறித்த காலத்திற்குள் தரமான வகையில் முடிக்க வேண்டும் என எம்.பி.,க்கள் வலியுறுத்தினர். கடலுாரில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. கண்காணிப்பு குழுத் தலைவர் விஷ்ணு பிரசாத் எம்.பி., மற்றும் கண்காணிப்பு குழுத் இணைத் தலைவர் திருமாவளவன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எம்.எல்.ஏ., க்கள் ராதாகிருஷ்ணன், சிந்தனைச்செல்வன், மேயர், துணை மேயர் தாமரைசெல்வன், டி.ஆர்.ஓ., ராஜசேகரன், கமிஷனர் அணு, கூடுதல் கலெக்டர் சரண்யா, சப் கலெக்டர் கிஷன்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, வருவாய், கூட்டுறவு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை, பள்ளிக்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறை வாயிலாக மத்திய மற்றும் மாநில அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்பாடு, முன்னேற்றம் குறித்து துறை அலுவலர்கள் விளக்கினர். எம்.பி.,க்கள் விஷ்ணு பிரசாத், திருமாவளவன் கூறுகையில், 'மத்திய அரசின் திட்டப்பணிகள் செயல்படுத்தும்போது ஏற்படும் இடர்பாடுகளை களைந்து சிறந்த பணியை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டியாக இந்தக்குழு செயல்படுகிறது. மத்திய, மாநில அரசின் திட்டங்களை குறித்த காலத்திற்குள் தரமாக முடிக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை