உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் மா.கம்யூ., மாவட்டக்குழு கூட்டம்

கடலுாரில் மா.கம்யூ., மாவட்டக்குழு கூட்டம்

கடலுார் ; கடலுார் மா.கம்யூ., கட்சி அலுவலகத்தில் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது.மாவட்ட செயற்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், கருப்பையன், சுப்பராயன், திருவரசு, ராஜேஷ்கண்ணன், தேன்மொழி, பிரகாஷ், அமர்நாத் உட்பட பலர் பங்கேற்றனர்.கடலுார் மாவட்டத்தில், பல கிராமங்களில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் முறையாக வேலை வழங்க வேண்டும். வேலை அட்டை இல்லாதவர்களுக்கு அட்டை வழங்க வேண்டும். விலை வாசி உயர்வை கண்டிப்பது.மத்திய, மாநில அரசு பணிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசிய பொருட்களை முறையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11ம் தேதி முதல் 20 தேதி வரை மாவட்டம் முழுதும் வீடு, வீடாக துண்டு பிரசுரம் வினியோக நடைபயணம் நடத்துவது என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை