உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநகராட்சியை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மாநகராட்சியை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

கடலுார்: கடலுார் மாநகராட்சி யை கண்டித்து, மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர குழு உறுப்பினர் திருமுருகன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் தேவநாதன், மாவட்டக்குழு ஆளவந்தார்,மாவட்டக்குழு பக்கீரான், மாநகர செயலாளர் அமர்நாத், மாவட்ட செயலாளர் மாதவன் கண்டன உரையாற்றினர். கடலுார் குண்டுசாலையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு 272 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டனர். குடியிருப்புக்கான பணத்தை செலுத்தியும் கிரைய பத்திரம் கொடுக்காததை கண்டிப்பது. முகவரி மாற்றம் செய்யாததைக்கண்டித்தும், ஏப்ரல் மாதத்திலிருந்து சொத்துவரி கட்ட வற்புறுத்தும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை