உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 25 ஆண்டுகளாக வடலுார் தைப்பூசத்திற்கு அரிசி, காய்கறி கொடுக்கும் இஸ்லாமியர்

25 ஆண்டுகளாக வடலுார் தைப்பூசத்திற்கு அரிசி, காய்கறி கொடுக்கும் இஸ்லாமியர்

கடலுார்: வடலுாரில் நடைபெறும் தைப்பூச அன்னதானத்திற்கு கடந்த 25 ஆண்டுகளாக அரிசி, காய்கறி வாங்கி கொடுக்கும் இஸ்லாமியரின் செயல் பாராட்டுக்குறியது. கடலுார் லாரன்ஸ் ரோடு சிக்னல் அருகே எஸ்.கே.பி.,காய்கறி கடையை நடத்தி வருபவர் பக்கீரான். இவர் சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவராகவும் உள்ளார். இவர் கடந்த 25ஆண்டுகளுக்கும் மேலாக வடலுார் வள்ளலார் சத்தியஞானசபையில் நடக்கும் தைப்பூச அன்னதாக விழாவிற்கு அரிசி, காய்கறிகளை தொடர்ந்து அனுப்பி வருகிறார். இதுகுறித்து பக்கீரான் கூறும் போது, ''வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற மகத்தான கோட்பாட்டை உலகுக்கு உரைத்தவர் வள்ளலார். சிறுவயதில் இருந்தே வள்ளலாரின் கோட்பாடுகள் மீது ஈர்ப்பு உண்டு. வடலுாரைச் சேர்ந்த சிவப்பெருமாள் என்ற எனது நண்பர் நான் கஷ்டத்தில் இருந்த போதே, தைப்பூச அன்னதானத்திற்கு உதவி செய், கஷ்டங்கள் தீரும் என்றார். 20வருடங்களுக்கு முன்பு ஐந்து மூட்டை அரிசி வாங்கிக்கொடுத்தேன். அடுத்த வருடம் 10 மூட்டை அரிசி வாங்கிக் கொடுத்தேன். இதுபோல் தொடர்ந்து உதவி செய்துகொண்டிருந்த போது, நான் காய்கறி கடை வைத்திருப்பதை அறிந்து காய்கறிகள் கிடைப்பது சிரமமாக உள்ளது என்றனர். அதைத்தொடர்ந்து காய்கறிகளும் அனுப்பி வருகிறேன். கடந்த ஆண்டு 20டன் காய்கறிகள், 100மூட்டை அரிசி, 5ஆயிரம் பாட்டில் குடிநீர் அனுப்பி வைத்தோம். பசித்தவனுக்கு சோறு போடுவது மிகப்பெரிய தொண்டு. மனிதநேய அடிப்படையிலான இந்த தொண்டிற்கு எங்களால் இயன்ற உதவியைச் செய்து வருகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை