முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம்
வேப்பூர், : வேப்பூர் முத்து மாரியம்மன் கோவிலில் தேர்த் திருவிழா நடந்தது. வேப்பூரில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத தேர்த் திருவிழா கடந்த 14ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று தேர்த் திருவிழாவையொட்டி காலை அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 11:00 மணிக்கு பக்தர்கள் அலகு குத்தி முக்கிய வீதிகள் வழியாக சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலை தேர்த் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.