உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என் ஓட்டுச்சாவடி  வெற்றி ஓட்டுச்சாவடி

என் ஓட்டுச்சாவடி  வெற்றி ஓட்டுச்சாவடி

விருத்தாசலம்:விருத்தாசலம் அடுத்த எம்.பட்டியில், வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், 'என் ஓட்டுச்சாவடி, வெற்றி ஓட்டுச்சாவடி' நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, வடக்கு ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர்கள் தர்ம மணிவேல், ராஜேந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருத்தாசலம் சட்டசபை தொகுதி மேற்பார்வையாளர் குலோத்துங்கன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சதீஷ்குமார், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சவுந்தரராஜன், ஜெகதீஸ்வரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் வீரப்பாண்டியன், கிளை செயலாளர்கள் தங்கதுரை, விஜயகுமார், பாக முகவர்கள் ராஜ்குமார், கோபால், தயாநிதி, கோடீஸ்வரன் மற்றும் பி.டி.ஏ., - பி.எல்.சி., மூத்த நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி