வடலுாரில் வாகன சோதனை மர்ம நபர் தப்பியோட்டம்
கடலுார் ; வடலுாரில் வாகன சோதனையின் போது, தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.வடலுார் போலீசார் நேற்று காலை ரயில்வே கேட் அருகில் வாகன தணிக்கையி்ல் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த மர்ம நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்த முயன்றனர். ஆனால், அந்த நபர் பைக்கை அங்கேயே போட்டு விட்டு தப்பினார்.போலீசார் பிடிக்க முயன்றும் முடியவில்லை. பைக் மற்றும் மர்ம நபர் வைத்திருந்த கைப்பையில் போலீசார் சோதனை நடத்தியதில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள், பட்டுப் புடவை இருந்தது தெரிந்தது. பைக் திருடப்பட்ட பைக்கா அல்லது சொந்த பைக்கா என்றும், மர்ம நபர் கொள்ளையடிக்க வந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.