உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நடுவீரப்பட்டு ஆதிதிராவிட நலப்பள்ளி ஆண்டு விழா

நடுவீரப்பட்டு ஆதிதிராவிட நலப்பள்ளி ஆண்டு விழா

நடுவீரப்பட்டு, : நடுவீரப்பட்டு அரசு ஆதிரதிராவிட நல தொடக்கப்பள்ளியில் 84ம் ஆண்டு ஆண்டு விழா நடந்தது.தலைமை ஆசிரியர் வீரப்பன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுனர் சுதா, அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாநில முதன்மைச் செயலாளர் பாவாணன், ஆசிரியர் கூட்டமைப்பு மாநில செய்தி தொடர்பாளர் சந்திரகுமார், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சுகன்யா முன்னிலை வகித்தனர். ஆசிரியை ராஜலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.விழாவில் பண்ருட்டி ஜான்டூயி பள்ளி தலைமை ஆசிரியர் பாலு, பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., ஆசிரியர் ராஜா, வழக்கறிஞர் திருமார்பன் ஆகியோர், போட்டிகளில் வெற்றி மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ