மேலும் செய்திகள்
தாழநல்லுார் சாலை அகலப்படுத்தப்படுமா?
25-Oct-2024
திட்டக்குடி: குண்டும் குழியுமான அருகேரி - நந்திமங்கலம் கிராம இணைப்பு தார்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.திட்டக்குடி அடுத்த அருகேரி - நந்திமங்கலம் கிராமங்களை இணைக்கும், தார்சாலையை பயன்படுத்தி, அருகேரி, நந்திமங்கலம், வடகரை, கோனுார், தாழநல்லுார், எரப்பாவூர், கோவிலுார், சிறுமங்கலம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு, திட்டக்குடி, விருத்தாசலம், வேப்பூர், நல்லுார் உட்பட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இச்சாலை சீரமைக்காததால் அருகேரியில் இருந்து நந்திமங்கலம் வரை 1 கி.மீ., துாரத்திற்கு ஜல்லிகள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயமடைகின்றனர்.எனவே, குண்டும் குழியுமான அருகேரி - நந்திமங்கலம் கிராம இணைப்பு தார்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
25-Oct-2024