உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  நம்மாழ்வார் பீங்கான் சிலை வழங்கல்

 நம்மாழ்வார் பீங்கான் சிலை வழங்கல்

விருத்தாசலம்: விருத்தாசலம் பாலக்கரையில், செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம், பழமலை இயற்கை வழி வேளாண் கூட்டமைப்பு, தமிழ்க்காடு இயற்கை வேளாண் இயக்கம் ஆகிய அமைப்புகள் சார்பில், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், 12ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, எழுத்தாளர் ரத்தின புகழேந்தி தலைமை தாங்கினார். பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா, விருத்தாசலம் நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, நம்மாழ்வார் பீங்கான் சிலையை வழங்கி முருகன் வரவேற்றார். நிகழ்ச்சியில், இயற்கை விவசாய இளைஞர்கள் சுசிந்தர், மணிவேல், கோவிந்தராஜ், பாக்கியராஜ், மணியரசன், கனகசபை, கவியரசன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். மேலும், நம்மாழ்வார் பீங்கான் சிலையை வடிவமைத்த சிற்பி அந்தோணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் மரபு விதைகள் கண்காட்சி நடந்தது. இதில், திட்டக்குடி அடுத்த மா.பொடையூர் ஜே.எஸ்.ஏ., வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மாணவிகள் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இயற்கை விவசாயி சிவக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை