உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண் பலாத்கார முயற்சி நாதஸ்வர வித்வான் கைது

பெண் பலாத்கார முயற்சி நாதஸ்வர வித்வான் கைது

ஸ்ரீமுஷ்ணம் : பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நாதஸ்வரம் வித்வானை போலீசார் கைது செய்தனர்.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த நகரப்பாடியை சேர்ந்தவர் ஞானகுரு,21; நாதஸ்வரம் வித்வான். இவர் கடந்த 29ம் தேதி நள்ளிரவு ஒரு வீட்டிற்குள் புகுந்து, அங்கு தனியாக இருந்த 55 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார்.பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, அந்த பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்து ஞானகுரு தப்பிச் சென்றார்.இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப் பதிந்து ஞானகுருவை நேற்று கைது செய்து, சிறையிலடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை