உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேசிய தொழுநோய் தின விழிப்புணர்வு ஊர்வலம்

தேசிய தொழுநோய் தின விழிப்புணர்வு ஊர்வலம்

கடலுார்; தேசிய தொழுநோய் தினத்தை முன்னிட்டு, கடலுார் டவுன்ஹால் அருகே ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இதையடுத்து, அரசு தலைமை மருத்துவமனையில் தொழுநோய் சிகிச்சை பெற்றுவருபவர்களை, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கவுரவித்து பராமரிப்பு உபகரணங்கள் வழங்கினார்.பின், அவர் கூறுகையில், காந்தி நினைவு நாளை முன்னிட்டு ஜன., 30ம் தேதி தொழுநோய் விழிப்புணர்வு முகாம் ஜன., 30 முதல் பிப்., 15ம் தேதி வரை அனுசரிக்கப்பட உள்ளது. மேலும், எல்.சி.டி.சி., தொழுநோய் கண்டறியும் முகாம் வரும் பிப்., 13 முதல் 28ம் தேதி வரை 5 வட்டாரங்களிலும், 2 நகர பகுதிகளிலும் நடைபெற உள்ளது. தற்போது தொழுநோய் பரவும் விகிதம் கடலுார் மாவட்டத்தில் பத்தாயிரம் மக்கள் தொகைக்கு 0.27 ஆக உள்ளது. இதை 2027ம் ஆண்டுக்குள் தொழுநோய் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். அப்போது, நலப்பணிகள் இணை இயக்குனர் ஹிரியன் ரவிக்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி, தொழுநோய் துணை இயக்குனர் சித்திரைச்செல்வி, அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை